×

பல்வேறு நெருக்கடியில் சிக்கிய பைஜூஸ் விவகாரம் குறித்த விசாரணை விரைவடைகிறது: ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: பைஜூஸ் நிறுவனத்தில் தொடர்ந்து சிக்கல்கள் நிலவி வருவதால் அதன் ஆவணங்களை விரைவாக ஆய்வு செய்து அறிக்கை தருமாறு ஒன்றிய கார்ப்பரேட் விவகார அமைச்சகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011ல் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட திங்க் அண்ட் லேர்ன் நிறுவனம், தனது ஆன்லைன் கல்வி வழங்கும் பைஜூஸ் மொபைல் ஆப் மூலம் அசுர வளர்ச்சி பெற்றது. ஆனால் சமீபகாலமாக இந்நிறுவனம் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. அந்நிய செலாவணி விதிமுறை மீறியதால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆளாகி உள்ளது. இதன் முதலீட்டாளர்கள் பின்வாங்கியதால் பைஜூஸ் நிறுவனம் தத்தளிக்கிறது. நிறுவனர் பைஜூ ரவீந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் நிர்வாகக் குழுவில் இருந்து பங்குதாரர்களால் நீக்கப்பட்டுள்ளனர்.

கம்பெனி சட்ட விதிமறை மீறல்கள் தொடர்பாக ஐதராபாத்தில் உள்ள இந்நிறுவனத்தின் பிராந்திய அலுவலகத்தில் ஆய்வு செய்யுமாறு ஒன்றிய கார்ப்பரேட் அமைச்சகம் கடந்த ஆண்டு ஜூலையில் உத்தரவிட்டது. இந்நிலையில், தற்போது பைஜூஸ் மீதான சிக்கல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆய்வுப் பணிகளை விரைந்து முடித்து அறிக்கை தருமாறு அதிகாரிகளுக்கு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

The post பல்வேறு நெருக்கடியில் சிக்கிய பைஜூஸ் விவகாரம் குறித்த விசாரணை விரைவடைகிறது: ஒன்றிய அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Byjus ,Union Govt. ,NEW DELHI ,Union Ministry of Corporate Affairs ,ByJuice ,Bengaluru ,Union government ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை